
அடித்தாள்,
கோபம் வந்தது.
அரவணைப்பாளென்றெதிர்பார்த்தேன்,
மீண்டும், அடித்தாள்!!
பொறுத்தேன்...
கலங்கிய கண்கள் எரிந்தன
உவர் நீர் வழிந்து,
வறுமையாயிருந்த நாவில் தாகத்தை அதிகரித்தது.
அடியின் வலிமையால், உடல் நொந்தேன்
அடித்தாள்!!!
தன் கரங்களால் எனை சூழ்ந்தாள்,
தினறினேன்.
அடித்தாள்!
சிரித்தேன்.
அடியின் வலியில் துன்பம் மறந்தேன்.
அவளுடன் இருக்கும் பொழுது,
யாரும் என்னை எதுவுமே செய்ய முடியாதல்லவா?
அந்த நொடிக்காக வாழ்வது எத்தனை சுலபம்,
கடலன்னையின் மடியிலிருக்கையிலே!