Friday, April 11, 2008

என் முதல் கவிதை...

"றோட்டு" மேல போறான் ஒரு கேடி
அவன் வளர்க்கிறான் "பிரஞ்சு" தாடி
அவன் கையில இருக்கு வெள்ளை பீடி
அதால் ஆகப்போறான் சீக்கிரமா "பாடி"

தினந்தோறும் டப்பாங்கூத்து ஆடி
தெருவெல்லாம் கானாப்பாட்டு பாடி
அந்த கேடிமேல கண்ண வச்சாள் "லேடி"
அவள் போகப்போறாள் அவனோட ஓடி

கேடி சீதனமா கேட்டுப்புட்டான் கோடி
அத கேட்ட இடமோ மாடி...
கோபத்தாலே தள்ளிவிட்டா "லேடி"
கேடி ஆகிப்புட்டான் உடனே "பாடி"

பேராசை பெருநட்டம் தம்பி
நீ போகாதே பெண்களை நம்பி...
பின்னால் பத்திக்கொண்டு எரியுமே கும்பி
அதால் நீ அழுவாய் வெம்பி வெம்பி!

கேடயக் குறிப்பு: எந்தக் கருத்துக்களும் பொதுவானவை அல்ல, தொப்பி சரியா இருக்கிறவங்க மட்டும் போட்டுக்கொள்ளலாம். ;)

இதை நான் என்ன யோசனையில் எழுதினேன் என்று தெரியவில்லை... என்ன அற்புதமான தமிழ!? ஹீஹீஹீ...

கல்லூரி காலத்தை நினைவூட்டிய நிமலுக்கு நன்றி!

No comments: