Wednesday, March 19, 2008

அவளினடி...



அடித்தாள்,
கோபம் வந்தது.
அரவணைப்பாளென்றெதிர்பார்த்தேன்,
மீண்டும், அடித்தாள்!!
பொறுத்தேன்...

கலங்கிய கண்கள் எரிந்தன
உவர் நீர் வழிந்து,
வறுமையாயிருந்த நாவில் தாகத்தை அதிகரித்தது.
அடியின் வலிமையால், உடல் நொந்தேன்
அடித்தாள்!!!
தன் கரங்களால் எனை சூழ்ந்தாள்,
தினறினேன்.

அடித்தாள்!
சிரித்தேன்.
அடியின் வலியில் துன்பம் மறந்தேன்.
அவளுடன் இருக்கும் பொழுது,
யாரும் என்னை எதுவுமே செய்ய முடியாதல்லவா?

அந்த நொடிக்காக வாழ்வது எத்தனை சுலபம்,
கடலன்னையின் மடியிலிருக்கையிலே!

3 comments:

Concerned said...

Neat, அதுவும் தமிழை கில்லாடியாக பயன்படுத்தியதற்கு!
ஆமா....'அரவணைப்பாளென்றெதிர்பார்த்தேன்'- சேர்ப்பதற்கு அளவே இல்லை போல! என் மாணவர்கள் பார்த்தா, ஓடி விடுவாங்க. hehe

சந்தேகம்! அதென்ன, 'அவள்'?. யார் சொன்னாங்க பெண் என்று? 'அவன்' ஆக இருக்கலாமே? இல்லை, மதிப்புக்குரிய 'அவர்' ஆகவும் இருக்கலாமே! அதென்ன நியாயம்?! ஆனா வூனா, எல்லாத்தையும் பெண்மையாக்குவது?

என்றென்றும் புண்ணகை

Optimistic Marshwiggle said...

கடலப்பா, கடற்றந்தை, ஏன் Mr. கடல் என்று கூட எழுதியிருக்கலாம்; ஆனால் அழகாய் இருந்திருக்காது! :P

அது மட்டுமல்ல, அப்பா மடியில் படுக்கும் வாய்ப்பு கிடைப்பது அரிது...

அத்துடன், Tritonஐ கடல் என்ற கிரேக்கரைத் தவிர, அனேகமானோர் கடலைப் பெண் என்றல்லவா கருதுகிறார்கள்?

ஆகவேதான், பெண்ணாய் உருவகித்தேன்!

தமிழில் மட்டும் தானே இவ்வாறு சேர்த்தெழுதலாம்!? சும்மா ஒரு முயற்சி தான்! hehe

Optimistic Marshwiggle said...

மன்னிக்கவும் Triton அல்ல Poseidon... ;D